திரை இசையில் தர்பாரி கனடா ராகம்
கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம்
மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா
நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா
ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே.ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை
ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன்
ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் 'தர்பாரி' கனடா எனப் பெயர் பெற்றது போலும்.
சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு. உங்களுக்கு தெரிந்தவற்றை எடுத்து விடுங்களேன்...!
14 comments:
ஜீவா
தர்பாரி கனடா ராகத்தின் பெயரிலேயே ரெண்டு ராகங்கள் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கே! தர்பார் + கானடா!
இந்த இரண்டுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா?
கல்யாணத் தேனிலா - எனக்கு மிகவும் பிடித்த பாடல் - என்ன ஒரு மென்மையான சுகம்!
ஹரி தும ஹரோன்னு எம்.எஸ் பாடுவாங்களே-அது தர்பாரி கானடா தானே?
மருதமலை மாமணியே முருகய்யா - பாட்டை விட்டுட்டீங்களே!
ஜகதலப்பிரதாபன் படத்தில் சீர்காழி அவர்கள் பாடிய 'சிவசங்கரி....' என்ற பாடலும் குங்குமம் படத்தில் டியெம்மெஸ்ஸும் ஜானகியும் பாடிய 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை...' என்ற பாடலும் இந்த இராகத்தில் அமைந்த மிகச் சிறப்பான பாடல்கள்.
நமக்கு பாடல்களை ரசிக்கத்தான் தெரியும்... நல்ல ராகம்... அருமையான பாடல்கள்...
தர்பாரி கானடா ஒரு அற்புதமான ராகம். இந்த ராகத்தின் முழு பரிமாணம் அம்மா எம்.எஸ். பாடிய
ஹரி தும் ...என்னும் பாடலில் உள்ளது. இதைக் கேட்க விரும்பும் அன்பர்கள் செல்லவும்:
http://movieraghas.blogspot.com/2007/06/darbaari-kaanadameera-bhajan-by-ms.html
இத்துடன் பண்டிட் கிஷன் மஹாராஜ், விலாயத கான் தர்பாரி (இதுவும் ஹிந்துஸ்தானி தர்பாரி ( கர்னாடிக்
தர்பார் அல்ல) இசையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தர்பாரி கானடா தர்பார், கானடா ராகங்களுக்கும் பெயர் ஒற்றுமை இருப்பதைத் தவிர
வேறு இல்லை. ஆயினும் சில சமயம் ( காற்றே சினி பாடலில் உதாரணமாக..) கானடாவின்
அதிக மான பிரயோகங்கள் இருப்பதால், தர்பாரி கானடா போல் இருக்கிறது.
கானடா ராகத்தை பாடிக்கொண்டே தர்பாரி கானடாவையும் தொட்டுவிட்டு திரும்பி வரல இயலும்
என நினைக்கிறேன். எதற்கும் எங்கள் வீட்டு expert commentator
இது பற்றிய தனது கருத்துக்களைச் சொல்வாராயின் அதை ( வித்தியாசங்களை ) எனது
http://movieraghas.blogspot.com
தருகிறேன். இந்த ராகம் ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளை ஒரளவுக்கு
some sort of visualisation
ஆக
http://movieraghas.blogspot.com/2006/12/darbari-kaanada.html
ல் தந்திருக்கிறேன்.
domestic break: my better half says something. Please wait.
ஏன்னா, காலம்பர கார்த்தாலே உங்க ஃப்ரன்டை இப்படி ரம்பம் மாதிரி அறுத்து தள்ரேள் !
ஏதோ நாலு அழகா பாட்டு போட்டிருக்காரே அதைக் கேட்டுட்டு, நன்னா இருக்குன்னு
ஒரு வார்த்தை சொன்னா போதாதோ !
நான்: சரிதாண்டி, எனக்குத் தெரிஞ்சத எங்கதான் சொல்றது?
ராக்ஷசி: ஆமாம். தெரிஞ்சதுன்னு சொல்லாதேங்கோ..தெரிஞ்சதா நினைச்சிண்டு இருக்கறதுன்னு
சொல்லுங்கோ... மேலே மேலே அளந்துண்டே போகாமே, சத்தம் போடாமே, அந்த பாட்டு அதான்...மலரே மெளனமா...அதைக் கொஞ்ச நேரம் மெளனமா கேளுங்கோ..
in fact மெளனமா இருக்கக் கத்துக்கோங்கோ....
நான்: ஓகே..ஓகே..ஓகே... இந்தாத்துலே சுதந்திரமா மனுஷன் நாலு வார்த்தை பேசிடமுடியாதே !!
சுப்புரத்தினம்.
தஞ்சை.
தர்பாரி கானடாவின் ஒண்ணு விட்ட அண்ணா கானடாவைப்ற்றி
http://simulationpadaippugal.blogspot.com/2006/08/01.html
- சிமுலேஷன்
//இருக்கே! தர்பார் + கானடா!
இந்த இரண்டுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா?//
கே.ஆர்.எஸ்,
தர்பாரி கனடாவைத்தான் சுருக்கமா தர்பார் - அப்படின்னு சொல்லறாங்கன்னு நினைக்கிறேன்.
//ஹரி தும ஹரோன்னு எம்.எஸ் பாடுவாங்களே-அது தர்பாரி கானடா தானே?//
இதுவரை அந்தப்பாடலைக் கேட்டதில்லை - இனிமேதான் கேக்கணும். கீழே சூரி ஐயாவும் பரிந்துரைத்திருக்கிறார்.
//மருதமலை மாமணியே முருகய்யா - பாட்டை விட்டுட்டீங்களே!//
அடடா, முருகன் பாட்டையே விட்டுட்டேனே!
வாங்க ஓகை சார்,
'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..' - என்ன அருமையான பாடல் - அமரகானம் அல்லவா!
ஆகா,
இப்பதான் முழுசா சூரி ஐயா விளக்கி இருப்பதைப் படிக்கிறேன்: ஹிந்துஸ்தானி தர்பாரியும் - கர்நாடக தர்பாரும் வேறு என்று!
(ஹிந்துஸ்தானி தர்பாரி - தர்பாரி கானடா)
கனடா என்று எழுதுவதைக் காட்டிலும் - கானடா என்று எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ச்சின்னப் பையன் :
பாட்டை ரசிக்கத் தெரிந்தால் அதுக்குமேல வேறென்ன வேண்டும்! - அதுவே இன்பம்!
வாங்க சிமுலேசன்,
//ஒண்ணு விட்ட அண்ணா...//
:-)
தர்பாரிகானடா -தோடி ஏதெனும் தொடர்பு உண்டா?.
கானடா.. கானடா..
கா(னு) துக்கு விருந்தளிக்கும் கானமடா.. (கான் என்றாலும் இந்தியிலே காது)
கனடா ஒரு நாடு. அமெரிக்காவுக்கு மேலே டர்பன் (தலைப்பாகை) மாதிரி உட்கார்ந்து இருப்பது.
சரியாகச் சொல்கிறேனா...
வயதான காலத்தில் காலை உடைத்துவிடுகிறேன் அல்லது
தாறு மாறாகப் போட்டு விடுகிறேன். அன்றொரு நாள்
ஜீவா என்ற பெயரில் ஏதோ சொல்லப்போய் வசமாய் மாட்டிக்கொண்டு
முழித்து பின் அதற்கான ஒரு சால்ஜாப்பையும் சொன்னது ஞாபகம் வருகிறது.
அது இருக்கட்டும்.
சிமுலேஷன் பதிவுக்குச் சென்றேன். ஒண்ணுவிட்ட அண்ணாவைப் பார்க்க .
நன்றாக இருக்கிறார். (மூவி ராகாஸுக்கு கஸின் மாதிரி இருக்கு)
அது என்ன சிமுலேஷன் என்று பெயர் வைத்திருக்கிறார்.
எங்க ஊர் பழைய எலக்க்ஷன் கமிஷணர் டி.என்.சேஷனுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாவா?
மறுபடியும் அது இருக்கட்டும்.
ஜான் டிக்கன்ஸின் கோவர்தன் கிரிதாரி (தர்பாரி கானடா) வும் குன்னக் குடி யின் தில்லானாவும்
கேட்டீரோ ? கலப்பில்லாத ஆவின் பால் மாதிரி அது இரண்டும் தர்பாரி கானடா. ப்யூர்
அஃப் கோர்ஸ் பீம் ஸேன் ஜோஷியும் நம்ம அம்மா எம்.எஸ்ஸும் (தும் ஹரோ) தான்.
இப்போதைக்கு போதும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
i think 'agaaya vennilave is not darbari kanada. it is in JaunPuri. :-)
சூரி ஐயா, மன்னிக்கவும் - நான் இன்னமும் விளக்கமாக என் மறுமொழியை எழுதி இருக்க வேண்டும் - கனடா என்று தவறாக நான் தான்!
ஹரி தும் ஹரோ வும், பீம்சென் ஜோஷியும் கேட்டேன் - ஆனால் அவ்வளவாக பிடிபடவில்லை - நிதானமாக அப்புறம் கேட்க வேண்டும்.
Post a Comment