பந்து வீச்சாளர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பந்து வீச்சாளர் துடுப்பாட்ட போட்டிகளின் போது பந்து வீசும் வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் பட்டிகையின் ஒரு மூளயில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கு மட்டையாளரை நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு பந்துப் பரிமாற்றத்தை தொடர்ந்து வீச முயும். அதன் பிறகு ஒரு பந்துப் பரிமாற்றத்துக்கு பிறகு மீண்டும் வீசலாம். ஒரு பந்துவீச்சாளர் வீசக்கூடிய அதிகூடிய பந்துப் பரிமாற்றங்கள் போட்டி வகையின் படி வேறுபடும். பந்து வீச்சாளர் ஒருவர் திறமையான மட்டையாளராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் சகலதுறை ஆட்டக்காரர் என அழைக்கப்படுவார். பந்துவீச்சாளரைப் பந்துவீச்சு பாணியைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கலாம்.
வேகப்பந்து வீச்சாளர் பந்தை 160 கிமீ/ம வேகம் வரை வீசுபவர்களாவர். இவர்களே பொதுவாகப் போட்டியில் முதலாவதாகப் பந்து வீசுபவர்களாவர். இவர்கள் பந்தை வீசு முன்னர் நீண்ட தூரம் ஓடி உந்தத்தைப் பெற்று அவ்வுந்தத்தைப் பயன்படுத்திப் பந்தை வேகமாக வீசுவர்.
மத்திமவேகப் பந்துவீச்சாளர் இவர்கள் பந்தை மத்திம வேகத்தில் வீசுபவர்களாவர்.
சுழற்பந்து வீச்சாளர் இவர்கள் பந்தை மிக மெதுவாக வீசுபவர்களாவர். இவர்கள் பட்டிகையில் படும் பந்தைச் சுழற்றுவதன் மூலம் பந்து வீசுவர்.