எட்மண்ட் ஹில்லரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| எட்மண்ட் ஹில்லரி | |
|---|---|
|
எட்மண்ட் ஹில்லரி
|
|
| பிறப்பு | ஜூலை 20, 1919 (88 அகவை) துவாகௌ (Tuakau), வடக்குத் தீவு, நியூசிலாந்து |
| இறப்பு | ஜனவரி 11 2008 (அகவை 88) ஆக்லாந்து, நியூசிலாந்து |
| துணை | லூயிஸ் மேரி ரோஸ்(1953-1975), ஜூன் மல்குரூ (1989-தற்பொழுது) |
| குழந்தைகள் | பீட்டர் (1954), சாரா (1955), பெலிண்டா (1959-1975) |
சர் எட்மண்ட் ஹில்லரி (ஜூலை 20, 1919 - ஜனவரி 11, 2008) நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர். மே 29 1953 ஆம் நாள் ஷெர்ப்பா மலையேறுநர் டென்சிங் நோர்கே அவர்களுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹில்லரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பார் தலைமையில் பிரித்தானியரின் ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும்.
நியூசிலாந்து நாட்டு டாலரில் எட்மண்ட் ஹில்லரியின் படம்