Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

பேச்சு:முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதற் பக்கம் தொடர்பான உரையாடல் மட்டும் இப்பக்கத்தில் செய்யலாம். விக்கிபீடியா தொடர்பான உரையாடல்களுக்கு ஆலமரத்தடிக்குச் செல்லவும்.

பொருளடக்கம்

[தொகு] முந்தைய முதற் பக்கம் உரையாடல்கள்

  • தொகுப்பு 1 - முதற்பக்க ஒழுங்கமைப்பு மற்றும் இன்றைப்படுத்தல் பற்றிய உரையாடல்கள்

[தொகு] முதற் பக்கம் இற்றைப்படுத்தல் - அறிவிப்பு

முதற் பக்கம் இற்றைப்படுத்தல் ஒரு முக்கிய பணியாகும். பலரது கவனத்தை முதற் பக்கம் ஈர்க்கும் என்பதால், அதை பல காலமாக இற்றைப்படுத்தாமல் விடுவதோ அல்லது அவ்வப்பொழுதோ இற்றைப்படுத்துவதோ தமிழ் விக்கிபீடியாவின் செயலாக்கத்தை பற்றி ஒரு குறைவான தோற்றப்பாட்டை தோற்றுவிக்கும். இயன்றவரை ஒரு வாரத்துக்கு ஒரு முறையாவது முதற்பக்க கட்டுரைகளைத் தவறாது இற்றைப்படுத்துவது நன்று.

  • பயனர்:Kanags நல்ல விதமாக நாள்தோறும் பல விடயங்களை தவறாமல் இற்றைப்படுத்துவது போல, இந்த விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் நான் இயன்றவரை கிழமை தோறும் (ஒவ்வொரு திங்களும்) இற்றைப்படுத்துவதை வழக்கத்து கொண்டுவர முயற்சி எடுக்கிறேன்.
  • கட்டுரைகளை எந்த பயனரும் பரிந்துரைக்கலாம். அப்படி பரிந்துரைக்கப்படா சந்தர்ப்பத்தில் தெரிவை நானே இப்போதைக்கு மேற்கொள்வேன். விரும்பினால், எந்தப் பயனரும் இந்தப் பணியை மேற்கொள்ளலாம். நன்றி.

--Natkeeran 14:06, 30 செப்டெம்பர் 2007 (UTC)

நற்கீரன், நீங்கள் கூறுவதை நான் வரவேற்கிறேன்,. நானும் இதுபற்றி எழுத வேண்டும் (அடிக்கடி புதுப்பித்தல், இற்றைப்படுத்தல்) என்று பலமுறை எண்ணியதுண்டு. முதலாவது முதற்பக்க வடிவமைப்பு நிறைவு தருவதாக இல்லை. 3-4 நாட்களுக்கு ஒரு முறையாவது முதற் பக்கத்தில் ஒரு கண்ணைக்கவரும் படம் இருத்தல் வேண்டும். ஒரு 50-100 முறைக்குப் பின் மீண்டும் அதே படமே, தேவை இருந்தால் வரலாம். கருத்தைக் கிளருமாறு ஏதேனும் ஒரு புதிய செய்தி/படைப்பு/கண்டுபிடிப்பு இடம்பெற வேண்டும். அண்மையில் வியட்நாமில் 12 புதிய உயிரினங்கள் (புதிய ஒரு பாம்பு முதல் செடி கொடிகள் வரை) கண்டுபிடித்துள்ளார்கள். நாள்தோறும் அறிவைக் கிளரும் ஆக்கநிகழ்வுகள் (குத்து, கொலை, அழிவு ஒரு புறம் இருக்கட்டும், அவையும் முக்கியமானவையே) நிறைய நடக்கின்றன. அவைகளில் ஏதேனும் ஒன்றை குறித்து ஒரு சிறு குறிப்பாவது எழுதி வரலாம். முதற்பக்கத்தில் முக்கியமான பெரும் பகுப்புகள் (8-12 வரை) அழகுடன் அமைத்து இருப்பது நல்லது (ஆங்கிலம், பிரென்ச்சு, ஹங்கேரிய மொழி, இத்தாலிய மொழி ஆகிய விக்கி முதற்பக்கத்தைப் பார்க்க்லாம். ஆனால் அவற்றினும் அழகாக முதற்பக்கம் அமைய வேண்டும்). --செல்வா 14:43, 30 செப்டெம்பர் 2007 (UTC)
முன்னர் Wikipedia:தகவல் காத்திருப்பு வரிசை என்ற பக்கதில் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களுக்கு உங்களுக்கு தெரியுமா என்ற தலைப்பின் கீழ் இன்றைப்படுத்தினோம். அதை மீள் உயிர்ப்பிக்கலாம். கண்ணைக்கவரும் படத்துக்கு ஒரு காத்திருப்பு வரிசை உருவாக்கி செயல்படுத்தலாம். இன்றைப்படுத்தல் Process தெளிவாக்கி, மேலும் இலகுவாக்க வேண்டும். தொடர் பயனர்கள் இதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக பரிந்துரைகள் தருவதில், தெரிவுகளை மேற்கொள்வதில். வடிவமைப்பு விடயத்தை பற்றி சற்று அலசி விட்டு பின்னர் கருத்துக்களைப் பகிர்கிறேன். மேலும் சில தகவல்களுக்கு: Wikipedia:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு.
--Natkeeran 14:59, 30 செப்டெம்பர் 2007 (UTC)

[தொகு] முதற் பக்கத்தில் பிழையான தோற்றம் - கவனிக்க

Wikipedia:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 15 --Natkeeran 12:05, 15 அக்டோபர் 2007 (UTC)

முதற்பக்கக் கட்டுரையாகிய பனையில் முதல் வரியே பிழையாக உள்ளது. அதனைத் திருத்தினேன், ஆனால் திருத்திய வரிகள் முதற்பக்கத்தில் பதிவாகவில்லை (ஆனால் கட்டுரையில் திருத்தங்கள் சரியாக் பதிவாகியுள்ளன) --செல்வா 00:46, 16 அக்டோபர் 2007 (UTC)

[தொகு] Keyboard

Neenga "Main page" ila pota keyboard ende computer'ila vellaisaiyavilai. Vera idathila keyboard iruka ? Nanri

மன்னிக்கவும், நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று விளங்கிக் கொள்ள இயலவில்லை. இன்னும் கொஞ்சம் விளக்குவீர்களா? நன்றி--ரவி 15:11, 22 நவம்பர் 2007 (UTC)

[தொகு] Error in First Page

Why there is a Picture of Akashagarbha Instead of Manjushri ? Just now I noticed it வினோத் 13:30, 21 நவம்பர் 2007 (UTC)

வினோத், படத்தை மாற்றியிருக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.--Sivakumar \பேச்சு 13:44, 21 நவம்பர் 2007 (UTC)

[தொகு] Home Page Link

Is it possible to Add a Link, which would make the Tamil Wikipedia the Home Page? It would be useful for attracting new Visitors, if we included this link. 15:03, 22 நவம்பர் 2007 (UTC) வினோத் 15:04, 22 நவம்பர் 2007 (UTC)

நல்ல யோசனை, வினோத். ஆனால், இதைச் செயற்படுத்துவதில் எனக்கு உள்ள சில தயக்கங்கள் - 1. பொதுவாய் boomark this, make this homepage போன்ற இணைப்புகள் வணிகத் தளங்களில் காணப்படும். எந்த விக்கிபீடியா தளத்திலும் பார்த்தது இல்லை. கட்டுரைக்குத் தொடர்பற்ற promo இணைப்புகளை நாம் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. தவிர, home page அமைத்துக் கொள்வது பெரும்பாலான இணையப் பயனர்களுக்கு எளிதில் தெரிந்த ஒரு விசயம் என்று நினைக்கிறேன் 2. இப்படி சும்மா homepageஆக வைத்திருப்பவர்கள் தமிழ் விக்கிபீடியாவுக்கான வருகைப் புள்ளிவிவரங்களை அசாதாரணமாக உயர்த்தி விடுவார்கள். இது நம் வீச்சைக் கணிக்க உதவாது. தானாய் யாரும் வைத்துக் கொண்டால் சரி. --ரவி 15:10, 22 நவம்பர் 2007 (UTC)

If we need more visitors, we gotta do this. Well, Atleast quite a % of people dont know how to keep homepage. If Users keep this as their homepage, atleast they will be able to Explore Tamil Wikipedia(ofcourse, when they are idle. I do that!!!). It was just a Suggestion. வினோத் 15:28, 22 நவம்பர் 2007 (UTC)

[தொகு] இன்று...என்னும் பகுதியில் திருத்தம் தேவை

இயற்கைச் செய்மதி என்பது தன்முரணாட்சி. இயற்கைத் துணைக்கோள், அல்லது நிலா என்று இருத்தல் வேண்டும்.--செல்வா 20:48, 7 ஜனவரி 2008 (UTC)

செல்வா, நீங்கள் குறிப்பிடும் பிழை எனக்குத் தென்படவில்லையே! என்ன தேதி காட்டுகிறது? ctrl என்ற தத்தலையும் "r" என்ற தத்தலையும் ஒருசேர அழுத்திப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 05:50, 8 ஜனவரி 2008 (UTC)
சுந்தர், யாரோ ஏற்கனவே சரி செய்து விட்டார்கள். நன்றி. :) --செல்வா 20:20, 8 ஜனவரி 2008 (UTC)

[தொகு] முதற்பக்கத்தை Update செய்தல்

த.வியின் முதல் பக்க கட்டுரைகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக Update செய்யப்படாமல் உள்ளது. எவரேனும் Update செயதால் நன்றாக இருக்கும் βινοδ வினோத் 17:19, 30 ஜனவரி 2008 (UTC)

வார்ப்புரு:Mainpagefeature திறந்தே உள்ளது. எனவே, ஆர்வமுடையோர் அதில் உள்ள தகுந்த வார்ப்புருக்களை மாற்றி முதற்பக்கத்தை இற்றைப்படுத்தி வைத்திருக்க உதவலாம். --ரவி 18:43, 30 ஜனவரி 2008 (UTC)

[தொகு] முதற்பக்க கட்டுரைகள்

முதற்பக்கத்தில் இரு கட்டுரைகளுக்கு பதில், ஒரு கட்டுரையாக மாற்றி, இரு நாட்களுக்கு ஒரு முறை இற்றைப்படுத்தலாம் என் பரிந்துரைக்கிறேன். மேலும்தெரியுமா உங்களுக்கு ? பகுதியை ஏன் முதற்பக்கத்தில் இருந்து விட்டு விட்டீர்கள் ? பழைய உரையாடல்களில் இருந்து இந்த பகுதி முதற்பக்கத்தில் இருந்தற்கான அறிகுறிகள் உள்ளதை கண்டேன் βινόδ  வினோத் 08:37, 31 ஜனவரி 2008 (UTC)

Your