செ. யோகநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செ. யோகநாதன் (இ. ஜனவரி 28, 2008) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதியவர்.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார்.
குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.
[தொகு] இவரது நூல்கள்
- யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
- ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
- காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
- வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
- அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
- கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
- அசோகவனம் (சிறுகதைகள், 1998)