Hello and welcome to Tamil Heritage News. This is a blog maintained by Tamil Heritage Foundation, an international initiative to preserve Tamil heritage materials in electronic (digital) form. You may see in this blog announcements, recent releases and articles about Tamil culture. If you want to be a contributor to this blog, please contact us.
17/08 THF Announcement
தமிழின் பாரம்பரிய சொத்துக்களைப் ஒலிவடிவில் சேகரிப்போம் - திட்ட அறிவிப்பு
சுபாஷினி கனகசுந்தரம்
தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் திட்டத்தை முன்வைத்து ஆரம்புக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளை. ஓலைச் சுவடிகள் மட்டுமன்றி அழிந்து விடும் நிலையிலிருக்கும் நூல்களையும் பாதுகாக்கும் திட்டத்தையும் இதனோடு சேர்த்துக் கொண்டு பல அரிய நூல்களை நமது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கின்றோம். இந்த முயற்சி மேலும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இதனோடு நின்று விடாமல் ஓவியங்கள், இசை, கலை சம்பந்தப்பட்ட வித்தியாசமான ஆக்கங்கள் பலவற்றையும் மின்பதிவாக்கம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதன் வரிசையில் இப்போது புதிதாக தமிழ் புத்தாண்டு அன்று ஒலி வடிவ செய்திகளை மின்பதிப்பாக்கம் செய்யும் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டோம்.
மண்ணின் குரல் தொடங்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. இதுவரை, பொருள் நிறைந்த பயனுள்ள சுவாரசியமான பல ஆக்கங்கள் இந்த ஊடகத்தின் வழி பதிப்பாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இணையத் தொழில்நுடட்பத்தின் பரப்பு விரிந்தது. அதன் துணைகொண்டு தமிழில் ஆக்கப்படுத்தக்கூடிய விஷயங்கள் பல. இந்த வளர்ச்சியை, அதனால் பெறக்கூடிய பலனை எண்ணும் போது இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மிக முக்கிய, தமிழ் மொழியிலான அறிய பல தகவல்களைச், செய்திகளை நமது பாரம்பரிய விஷயங்களை பாதுகாப்பது மிக சுலபம் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை அதன் நோக்கத்தில் இந்த வருடம் மேலும் விரிவு காணும் வகையில் செயல்பட விழைந்துள்ளது.
இந்த வகையில் தமிழில் தொன்மையான, பாரம்பரியம், கலை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட வாய்மொழி செய்திகளை, mp3 கோப்புகளாக சேகரிப்பதற்கான திட்டத்தை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். தமிழ் மொழியின் பாரம்பரிய சொத்துக்களாகக் கருதப்படக் கூடியவை கிராமிய மண்ணில் உயிர் பெற்ற வாய்மொழிச் செய்திகள். நாட்டார் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், சிறுவர் கதைகள், கிராமியப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், கிராம வரலாறு, கிரமத்துக் கதை, கிராமப் பெரியவர்கள் வரலாறு, சிறுதெய்வ வழிபாட்டுக் கதைகள், சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், இப்படிப் பல விஷயங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை இழந்து வரும் நிலையிலிருப்பதை மறுக்க முடியாது.
இவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட வேண்டும். இதுவே இப்போது த.ம.அ. புதிய திட்டம். இந்த திட்டத்தில் ஈடுபட கணினி, ஒரு சிறிய mp3 recorder மட்டுமே தொழில்நுட்ப ரீதியில் தேவை. இதற்கும் மேலாக இந்த திட்டத்தில் தமிழுக்காக உழைக்கும் ஆர்வமும் மணப்பான்மையும் முக்கியம்.
நண்பர்களே, உங்கள் அண்மையில், சுற்றத்தார் மத்தியில், நண்பர்கள் வட்டாரத்தில் இம்மாதிரியான செய்திகளை அறிந்தோர், திறமைகளை உள்ளோர் இருப்பின் தயங்காமல் மின் தமிழில் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் இவ்வகை வாழ்மொழிச் செய்திகளை mp3 கோப்புக்களாக பதிவு செய்து அனுப்பி வைக்கலாம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரியப்படுத்தலாம். இப்பபடித் தெரியப்படுத்துவதன் வழி தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டக்குழுவினர் உங்களைத் தொடர்பு கொண்டு இவ்விஷயங்களைப் பதிவாக்கம் செய்ய முடியும். இது ஒரு கூட்டுத் திட்டம். இது வெற்றியடைய தமிழர் அனைவரின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.
17/08 Siva Pillai honoured with EAL-European Award
Mr.Siva Pillai of London, an old friend of THF is recently honoured with EAL-European Award for languages-2007 (Tamil -Language teachings). This brings lot of attention from the local main stream schools about the (Tamil) language teaching methods developed by Mr.Siva Pillai in UK.
01/08 Workshop for Tamil Blogging!
தமிழ் வலைப்பதிவர் பட்டறை
பட்டறை என்று நடைபெறுகிறது?
ஆகஸ்டு 5, 2007 ஞாயிற்றுக் கிழமை 09:30 - 05:30
எங்கே?
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)
எவ்வளவு நேரம்?
காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.
கட்டணம் எவ்வளவு?
கட்டணம் ஏதும் இல்லை. அழைப்பிதழ் தேவை இல்லை. இங்கு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொண்டால் பட்டறையைத் திட்டமிட உதவும். குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எதற்கு?
வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
இன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பேச்சுப் பக்கத்தில் சொல்லுங்கள்.
எத்தனை பேர்?
200லிருந்து 250 பேர் கலந்து கொள்ளும் வகையில் இது இருக்கும்.
யாருக்கு?
வலைப் பதிவில் தீவிரமாகச் செயல் படும், மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் பணி புரிபவர்கள்
வலைப்பதிவுகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும், மென் பொருள் துறையில் பழக்கம் இல்லாதவர்கள்
வலைப்பதிவுகள் குறித்து அறிமுகம் இல்லாதவர்கள்.
யார் நடத்துகிறார்கள்?
நாம் எல்லோரும் சேர்ந்துதான். சென்னைத் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்த் துறை பட்டறை நடத்துவதற்கான அரங்க உதவிகளை அளிக்கிறது.
கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததைக் கற்பிக்கவும், தமக்கு வேண்டியதைக் கற்றுக் கொள்ளவும் தயாராக வர வேண்டும்.
பங்கு கொள்ள என்ன செய்ய வேண்டும்?