Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

பாமுனி - Bamuni
 

பாமினி தமிழ் தட்டச்சு முறையில் நேரடியாக யூனிகோட் unicode தரத்தில் தமிழை தட்டுவதற்கான ஒரு மின் விசைப்பலகை கோப்பு keyboard file "bamuni.kmx" பாமுனி ஆகும்.

இவ்விசைப்பலகை கோப்பை கீமான் KEYMAN என்னும் மென்பொருளுடன் பொருத்தி , யூனிகோட் unicode தரத்தில் நீங்கள் தமிழை தட்டக்கூடியதாக இருக்கும். எவ்வாறு பாமுனி விசைப்பலகையை உங்களது கணணியில் பொருத்தி தமிழில் தட்டுவதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைய முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://www.jaffnalibrary.com/tools/bamuni.html

இதை சற்று விவரமாக கீழே பார்ப்போம்.

இணையத்தில் இன்று பரவலாக ஈ-கலப்பபை (E-Kalappai)அல்லது கீ மான் எனப்படும் ஒரு செயலி மூலம் பலரும், தமிழ் கணனியில் எழுதத்தெரியாவவர்களும் தமிழை பற்பல ஊடகங்களில் உள்ளிடுகிறார்கள்.

உதாரணம்:

மெசெஞ்சர், வேட் எழுதி, அரட்டை, விருந்தினர் பதிவேடு போன்றவை....

இனி நான் எழுதபபோவது சற்று இந்த ஈ கலப்பையில் ஏற்கனவே உழுது அனுபவப்பட்டவர்களுக்கானது..

கணனிததமிழின் அடுத்த பாய்ச்சலான யூனிக்கோட்(unicode) முறையில் எழுதுவதற்கு ஆங்கிலமுறைமூலம் அமைந்த யூனிஅவரங்கால் (சின்னத்துரை சிறீவாஸ் - தமிழ் ஆராய்ச்சி) எனும் கலப்பை உண்டு.இது கூடுமானவரையில் தமிழை ஆங்கில முறைப்படி எழுதுபவர்களுக்கு இலகுவானதாகும்.


இந்தமுறையையே தமிழ்நாட்டவர் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

நாம் பாமினியில் தட்டசசு செய்து பழகியவர்கள்.

எமக்கு இந்த ஆங்கிலமுறைப்படி தமிழ் எழுதுவது எமது வேகத்தை கட்டுப்படுத்துகிறது.

எனவே தான் பாமினி வழியாக தட்டச்சு செய்பவர்களுக்கான கலப்பை இது!

நீங்கள் வழக்கம்போல் பாமினி முறையில் தட்டச்சு செய்ய இது யூனிக்கோட் முறையில் தமிழை உள்ளிடும்.

பாமுனி விசைப்பலகை கோப்பை கீழுள்ள இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.jaffnalibrary.com/tools/bamuni.kmx (right click on the mouse => save target as => and save)

எவ்வாறு பாமுனி விசைப்பலகையை உங்களது கணணியில் பொருத்தி தமிழில் தட்டுவதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைய முகவரியில் நீங்கள் பார்க்கலாம்.

http://www.jaffnalibrary.com/tools/bamuni.html

விபரம் தெரிந்தவர்களுக்கான பந்தி இது:

பாமினியில் ஆகார வரிசையில் வருபனவற்றை SHIFT Key அழுத்திக்கொண்டு அடிக்கவெண்டும். அதாவது அடிப்பதறகு பாமினியில் m என்ற எழுத்தை பயனபடுததுகிறோம் வன்னா அடிப்பதற்கு கப்பிற்றல் M அடிக்கிறோம்.

புதிய முறைப்படி இரண்டுதரம் m அடித்தால் வன்னாவாகும். இதே போல் மற்றைய எழுத்துக்களும் SHIFT Key தொல்லை இல்லை. அதேபொல் ஈகாரத்திற்கு வரும் தீ பீ சீ பொன்றவற்றிற்கும் P க்கு பதிலாக 2 தரம் p அடித்தால் போதும்.

மற்றும் க ச ல ப...... போன்றவற்றுடன் சேர்த்து ஒரு மைனஸ் - அடித்தால் குவாக மாறும். இரணடுதரம் மைனஸ் அடித்தால் கூவாக மாறும். அதே சமயம் பழைய முறையும் இருக்கும்.

ஈ-கலப்பை கோப்பை கீழுள்ள இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html

கீமான் கோப்பை கீழுள்ள இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.tavultesoft.com/keyman/downloads/keyman6-0-158-0.exe

தமிழ் யூனிகோட் என்றால் என்ன? கீழுள்ள இணைப்பில் ஒரு சிறிய அறிமுகம்:

http://www.suratha.com/tamilunicode.html

இலவச தமிழ் சிறுசெயலிகள் - Free tamil tools

 
Your