கிலோமீட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(கிமீ இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
மெட்ரிக் அளவை முறையில், கிலோமீட்டர் என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக் அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
| 1,000,000 | மில்லிமீட்டர் | = 1 கிலோமீட்டர் | |
| 10,000 | சதமமீட்டர் | = 1 கிலோமீட்டர் | |
| 1000 | மீட்டர் | = 1 கிலோமீட்டர் |
[தொகு] சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்
- புவிமையக் கோட்டில் பூமியின் சுற்றளவு - 40,075 கி.மீ
- பூமியிலிருந்து சந்திரனின் சராசரித் தூரம் - 238,854 கி.மீ
- பூமியிலிருந்து சூரியனின் மிகக் குறைந்த தூரம் - 147,097,800 கி.மீ
- கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8.84 கி.மீ