அற்புதமான டோஸ், அருமையான வரிகள், அழகான படம். நன்றி செந்தில்.
ஆமாம் நாம் அடைய இருக்கும் குறிக்கோள் நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியும்,
வெற்றியை எளிதாக்குகிறது, சாதனை இலக்கு நெருங்குகிறது.
புதிய அடி நம்பிக்கையோடு எடுத்து வைக்கும் போது நம் மனதில் எத்தனை மகிழ்ச்சி
கொள்கிறதோ அதனை விட பலமடங்கு மகிழ்ச்சி நாம் இலக்கை நெருங்க நெருங்க கிடைக்கும்
என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.
(கலக்குறீங்க செந்தில், உங்க டோஸ் எல்லாம் ஒரு தொகுப்பாக சேமித்து
வைத்திருங்க, பின்னர் நண்பர்களுக்கு பரிசாக கொடுங்க)
On 11/15/05, Senthil <rowdysent...@gmail.com> wrote:
> அடைய நினைக்கும் குறிக்கோள் எதுவாயினும் சரி..
> அதற்கான பாதை எவ்வளவு கடினமாயினும் சரி..
> தவறாமல் அதை அடைய உன் முழு முயற்சியை செலுத்து..
> ஒவ்வொரு அடியாய் எடுத்துவை
> "என்றுமே" என்பது கற்பனைக்கே கடினமாய் இருக்கலாம்
> "எதிர்காலம்" தூரமாய்த்தெரியலாம்
> ஆனால்
> ஒவ்வொரு காலையும்
> நாம் நினைத்ததை நோக்கிச் செல்ல,
> ஓர் புதிய அடி எடுத்து வைக்க
> ஓர் அற்புதமான வாய்ப்பு
> --
> என்றும் நட்புடன்,
> செந்தில்
--
Paransothi / Suresh